தென்னாபிரிக்க அணித்தலைவரான பப் டு பிளசிஸ் காயத்தினால், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கண்டி பள்லேகலையில் ஞாயிறன்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான 3 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் டு பிளசிஸ் களத்தடுப்புச் செய்யும்போது தோள் மூட்டில் காயமடைந்தார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைவதற்கு 6 வாரங்கள் செல்லலாம் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அவர், இலங்கை அணிக்கெதிராக எஞ்சியுள்ள 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் ஒரேயொரு சர்வதேச இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணித்தலைவர் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டு போட்டிகள் எஞ்சிய நிலையில் தென்னாபிரிக்கா 3 0 எனக் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. கண்டி பள்லேகலையில் பகலிரவு ஆட்டமாக இந்தப்போட்டி நடைபெறவுள்ளது.

(Visited 25 times, 1 visits today)