விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 21 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 21 என்ற கணக்கில் கைப்பற்றின.

5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (9ந்தேதி) தொடங்குகிறது.

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ், டோனி ஆகியோர் சாதித்தது போல விராட்கோலி முத்திரை பதிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 2 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 1986ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் வெற்றி கிடைத்தது. 5 விக்கெட் வித்தியாசத்தில் டேவிட் கோவா தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தியது.

அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையிலான இந்த மைதானத்தில் வெற்றி கிடைத்தது. அந்த அணி 95 ரன் வித்தியாசத்தில் குக் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த டெஸ்டில் இஷாந்த் சர்மா 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 17 டெஸ்டில் விளையாடி இருக்கிறது. இதில் 4 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 11 டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.

1932ம் ஆண்டு சி.கே.நாயுடு தலைமையிலான இந்திய அணி தனது டெஸ்டை லார்ட்ஸ் மைதானத்தில் ஆடியது. 11வது டெஸ்டில் விளையாடிய போது தான் கபில்தேவ் தலைமையில் முதல் வெற்றி கிடைத்தது. அதன்பிறகு டோனி அந்த பெருமையை பெற்றார்.

இவர்கள் வரிசையில் இணையும் ஆர்வத்தில் விராட்கோலி இருக்கிறார்.

(Visited 27 times, 1 visits today)