இயக்குனர் கவுதம் மேனன் தனது படங்களில் பாடல் காட்சிகளில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டுவார். பின்பு ஒரு காட்சியில் மட்டும் நடித்தார். அதன் பிறகு இயக்குனராகவே சில படங்களில் நடித்தார்.

கடைசியாக கோலி சோடா 2ம் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக பெரிய கேரக்டரில் நடித்தார். இப்படி படிப்படியாக நடிகர் ஆன கவுதம் மேனன் இப்போது ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஜெய் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் படத்தில் கவுதம்மேனன்தான் ஹீரோ. இதற்காக ஜெய், கவுதம் மேனனிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். தயாரிப்பாளரும் ரெடி. வருகிற ஆகஸ்ட் 15 முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த இவானா நடிக்கிறார். ஆனால் கவுதமிற்கு ஜோடியாக நடிக்க வில்லை. இவனாவிற்கு வரும் ஒரு பிரச்சினையிலிருந்து அவரை காப்பாற்றும் காட்பாதர் கேரக்டர் கவுதமிற்கு என்கிறார்கள். இன்னும் ஒரு சில நாளில் முறையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.

(Visited 26 times, 1 visits today)