வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நிலாவைப் காலையிலும் பார்க்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஜூலை 27ஆம் தேதி சந்திர கிரகணம் மற்றும் பிளட் மூன் ஆகியவை நிகழந்துள்ளதால்  அதன் தொடர்ச்சியாக இது நிகழ்வதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் நாளை மறுநாள் வரை (ஆகஸ்ட் 4) அதிகாலையில் சூரியன் உதயமான பின்பும் சில மணி நேரங்களுக்கு நிலாவையும் பார்க்க முடியும். சூரிய உச்சிக்குச் செல்லச் செல்ல நிலாவும் மறைந்துவிடும்.

முழு சந்திர கிரகணத்தில் பூமி, சந்திரன்,சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. இதற்குப் பின் அவை நகரும்போதுஇ பூமியில் நிலவு தோன்றும் நேரத்தில் இந்த மாறுபாடு சில நாட்களுக்கு ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள்.

(Visited 38 times, 1 visits today)