உலக அதிசயங்களுள் ஒன்றான சீன சுவர் குறித்து  அந்நாட்டு பெண் ஒருவர் அழகு தமிழில் விளக்கும் அருமையான வீடியோவை அனந்த் மகேந்திரா விளக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் மிகவும் பழமையான தமிழ் மொழி பரவிக் கிடக்கிறது என்றால் மிகையில்லை. தமிழர்களை விடஇ அதன் அழகும்  சிறப்பும் உணர்ந்து பல வெளிநாட்டவர் தமிழை கற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் கற்று அதை பேசி மகிழும் பல நாடுகளில் தமிழ் வானொலிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீனா, கனடா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் தமிழ் வானொலி சேவை இருக்கின்றன.

உலக அதிசயமான சீனாவின் நெடுஞ்சுவர் குறித்து  அந்நாட்டு பெண் ஒருவர் தமிழிலேயே கொஞ்சும் மொழியில் ‘வணக்கம்’ என கூறி விளக்கம் கொடுக்கிறார்.

சீன நெடுஞ்சுவரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம் குறித்தும்இ அங்குள்ள வீரர்கள் ஏதேனும் ஆபத்து என்றால் எப்படி தொடர்பு கொள்வார்கள் என அருமையாக விளக்கம் கொடுக்கிறார்.

(Visited 65 times, 1 visits today)