ஈரானுடன் நிபந்தனைகள் ஏதுமின்றி அவர்களுக்குத் தேவையான நேரத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு சந்திக்க வேண்டும் என்றால் நாங்கள் சந்திப்போம் என ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி, ஆகிய நாடுகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும், அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகிய வொஷிங்டன், எதிர்வரும் நாட்களில் ஈரான் மீது மீண்டும் பல பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்குத் தயாராகி வருகின்றது.

இம்மாத ஆரம்பத்தில் விரோதமான எச்சரிக்கைகளை ஈரான் அறிவித்திருந்த நிலையில், முன் நிபந்தனைகளின்றி ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

(Visited 34 times, 1 visits today)