ஓர் ஊடகமொன்றில் பணியாற்றுவதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் வழங்கி, இளைய சமுதாயத்தினரின் ஆளுமையை வளர்தது மேம்படையச் செய்யும் ஓர் ஊடகக் கல்வி
நிறுவனமே, voice of Sri Lanka ஆகும்.

எமது நிறுவனம், இலங்கையில் ஊடகக்கல்விகளை வழங்கும் மற்றைய நிறுவனங்களுக்கு, முன்னோடியாகவும் பிரசித்தம் பெற்றதாகவும் விளங்குகின்றது. மாணவர்களுக்காக வழங்கும் தன்னுடைய கற்கைநெறிகளை, நேரத்தியாகவும் கட்டமைப்புடனும் வழங்குவதே,voice of Sri Lanka வின்,
சிறப்பம்சமாகும்.

இந்த நிறுவனம்,இல. 1/V டெய்சி விலா அவனியூ, கொழும்பு 04இல் அமைந்துள்ளது.

Voice of Sri Lanka வினால் வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் அதன் தனிச்சிறப்பு பற்றி, நிறுவனத்தின் தமிழ் மற்றும் ஆங்கில கற்கை நெறியின் இயக்குனர் எம்.எஸ்.கே. தினேஷ் (BSC/MBB) உடன் கலந்துரையாடியிருந் தோம்.

கேள்வி உங்களது ஊடகப்பயிற்சி கற்கை நெறி தொடர்பாக விரிவாக கூறுங்கள்?

பதில் சிங்கள மொழி மூல ஊடகக் கற்கை நெறிகளை வழங்குவதற்காகவே, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர், Voice of Sri Lanka ஆரம்பிக்கப்பட்டது அன்றிலிருந்து இன்றுவரை நாடளாவிய ரீதியில் சுமார் 190 பயிற்சிப் பட்டறைகளை, நாம் நடத்தியுள்ளோம். இந்தப் பயிற்சி பட்டறை மூலம், ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை இனங்கண்டு, அவர்களுக்குத் தேவையான ஊடகப் பயிற்சிகளை வழங்கி வருகின்றோம் என்பதோடு, இனிவரும் காலப்பகுதியில் வழங்கவுள்ளோம்.

இந்த 4 வருட காலப்பகுதிக்குள், சுமார் 2000 மாணவர்கள், எங்களது ஊடகக்கல்விப் பயிற்சியை, வெற்றிகரமாக நிறைவுசெய்து, சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளமை எமது நிறுவனத்தின் மிகப்பெரிய சாதனையாகும். தற்போது நாம் வாழ்ந்து வரும் வர்த்தகமயமாக்கப்பட்ட இந்த உலகில், அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்பம்ள என்ற விடயமே பரவலாகியுள்ளது.

அத்தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஆளுமையாளர்களையும் ஆற்றல்மிக்கவர்களையும் உருவாக்க வேண்டும். அவ்வாறானவர்களை உருவாக்குவதே, Voice of Sri Lanka வின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. என்பது, எமக்கு பெருமைக்குரிய விடயமாகும்.

நாம் பேசும் மொழியே, தொழில்நுட்ப உலகத்தில் முன்னிலைப்படுத்தும் அவ்வாறு முன்னிலைப்படுத்துகையில், எமக்கு பயிற்சியுடன் கூடிய அறிவுத்தேடல் என்பது, இன்றியமையாததாகும். பயிற்சி என்று வருகையில், சுய ஆளுமை விருத்தியுடன் சமுதாய தயக்கமின்மை மற்றும் மொழி தொடர்பான அறிவு பற்றிய பயிற்சி என்பன அவசியமானதாகும்.

இவற்றை மேம்படுத்துவதால் எதிர்கால ஊடகத்துறையில் தனக்கான ஆளுமையை வளர்க்க இப்பயிற்சி துணைபுரிகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டே, இரண்டு மாதங்களுக்கு முன்னர், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல கற்கை நெறிகளையும் ஆரம்பிப்பதற்கு நாம் தீர்மானத்தோம்.

கேள்வி; தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல கற்கை நெறிகள், எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது?

பதில்; நான், கடந்த 12 ஆண்டுகளாக இங்கிலாந்தின் பிரிட்டிஷ் எயார்வேல்ஸில் செயற்பாட்டு முகாமையாளராக கடமையாற்றியவன். ஆனால், தமிழ் பேசும் மக்களுக்கென்று மாத்திரம், ஊடகம் சார் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். என்பது என்னுடைய பல நாள் கனவாகவே இருந்தது. அதனுள் ஊடகம் சார் மற்றும் ஆளுமை விருத்தி சம்பந்தமான பயிற்சிகளையும் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசும் இளைய சமுதாயத்தினருக்கு வழங்குவதும் மொழிசார் பேச்சுத்திறனை வழங்குவதும் எனது நோக்கமாகும்.

இதன்போதே, Voice of Sri Lanka வின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் நிரோஷ், தன்னுடைய நிறுவனத்தில், தமிழ் மற்றும் ஆங்கில பயிற்சி நெறிகளை ஆரம்பிப்பதற்கு தான் ஆர்வமாக உள்ளதாக கூறியிருந்தார். எங்கள் இருவரது சமூக நோக்கமுமாயிருந்ததே,Voice of Sri Lanka வில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மொழி மூல கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு, பலமான காரணமாக அமைந்தது.

கேள்வி; தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பயிற்சிகள் எவ்வாறு, யாரால் வழங்கப்படுகின்றன?

பதில்; இந்தப் பயிற்சியை தொடர்ந்து, வெளியேறும் ஒருவருக்கு, ஓர் ஊடகத்துறையில் பணியாற்றுவதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. ஊடகத்துறையில் தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் போதும், எம்முடைய அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் மூலம், இலகுவான தொழிலையும், பிரசித்தமான ஊடக நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.

தற்போது இலங்கையிலுள்ள பிரசித்தமான ஊடக நிறுவனங்களில், கடந்த காலங்களில் எம்மிடமிருந்து பயிற்சிகளை பெற்று வெளியேறியவர்கள். ஏராளமாக உள்ளனர். எமது பயிற்சிகளில், சுவாசம் மற்றும் குரற் பயிற்சி (Breathing and Voice Training) தொலைக்காட்சி மற்றும் வானொலி

நேரடி நிகழ்ச்சி தொகுத்து வழங்குதலுக்கான பயிற்சிகள், விளம்பரப் பின்னணிக் குரல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பின்னணி குரல் வழங்குதல் (Dubbing) தொலைக்காட்சி, வானொலிகளுக்கான புதிய நிகழ்ச்சிகளை தொகுத்தல்,வானொலி தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் தொடர்பான பயிற்சிகள் போன்ற பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந் தப்பயிற்சிகள் அனைத்தும், இலங்கையில் பிரசித்தி பெற்ற முதற்தர ஊடகங்களில் பணியாற்றும் சிறந்த ஊடகவியலாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், மூலம் வழங்கப்படுகின்றது.

 

 

**

(Visited 80 times, 1 visits today)