அதிரடி நாயகன் அப்ரிடியின் சாதனையினை  சிக்ஸர் நாயகன் கிறிஸ் கெய்ல் சனம் செய்துள்ளார்!

அனைத்து தரப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சிக்ஸர் அடித்தவர் என்னும் பட்டியலில், பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகன் அப்ரிடியின் சாதனையினை மேற்கிந்திய தீவுகள் அணியின் சிக்ஸர் நாயகன் கிறிஸ் கெயில் சமன் செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர் பட்டியலில் 476 சிக்ஸர்கள் (524 போட்டிகள்) அடித்து பாக்கிஸ்தான் வீரர் அப்ரிடி முதல் இடத்தில் இருக்கின்றார். இவரை அடுத்து தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல் இந்த சாதனையினை வெறும் 443 போட்டிகளிலேயே ஈடு செய்துள்ளார்.

தற்போது வங்கதேசம் அணியுடன் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரில் இந்த சாதனையினை கிறிஸ் கெயில் சமன் செய்துள்ளார்.

மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய அணி வென்றது. இதனையடுத்து ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை வென்றது.

இதனையடுத்து வரும் நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் துவங்குகிறது. இப்போட்டியில் கிறிஸ் கெயில் 1 சிக்ஸரினை அடிப்பாராயினும் இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பார் என்பது குறிப்பபிடத்தக்கது.

(Visited 72 times, 1 visits today)