பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ள நிலையில், இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை ஆட்டம் நிறைவடைந்த நிலையில் இலங்கை அணி 08 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களை பெற்று 312 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
வியாழக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட்  போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்ற நிலையில் பங்களாதேஷ் அணி வியாழக்கிழமை ஆட்ட நேரம் நிறைவடையும் போது 4 விக்கட்டுகளை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஆட்டத்தை தொடர்ந்தது.
இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியின் எந்தவொரு  துடுப்பாட்ட வீரரும் பிரகாசிக்கவில்லை. இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், பங்களாதேஷ் வீரர்கள் மிக வேகமாக பவிலியன் திரும்பும் நிலை காணப்பட்டது.முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
பதிலுக்கு மீண்டும் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றிருந்தது.இலங்கை அணி 312 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று சனிக்கிழமை தொடரவுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் மெஹிதி ஹசான் மிராஸ் ஆட்டமிழப்பின்றி 38 ஓட்டங்களை அணியின் அதிகபட்ச ஓட்டமாக பெற்றிருந்தார் விக்கட்  காப்பாளரான  லிட்டன் டாஸ் 25 ஓட்டங்களையும் இம்ருல் ஹயஸ் 19 ஓட்டங்களையும் அணித்தலைவர் மஹ்முமல்லா 17 ஓட்டங்களையும் பெற்றிருந்தர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் சுரங்க லக்மல் , அகில தனஞ்சய ஆகியோர் தலா 03 விக்கட்டுகளையும் டில்றுவான் பெரேரா 02 விக்கட்டுகளையும் பெற்றிருந்தனர். இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தநிலையில் 19 ஓட்டங்களை பெற்ற நிலையில் குஷால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அணி சற்று நிதானமான ஆட்டத்தினை தொடர்ந்த நிலையில் ஆட்டம் இரண்டாம் நாளில் நிறுத்தப்பட்டபோது 8 விக்கட்டுகளை இழந்திருந்தது.
 இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 32,தனஞ்சய டி சில்வா 28, தனுஷ்க குணதிலக 17, தினேஷ் சந்திமல் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.  ரோஷென் சில்வா 58 ஓட்டங்களுடனும் சுரங்க லக்மல் 07 ஒட்டங்களுடனும் களத்தில் இருக்கும் நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
(Visited 63 times, 1 visits today)