அமெரிக்காவில் அரசின் அத்தியாவசிய செலவினப் பணிகளுக்கு நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறுவதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இதனால், ஆண்டில் இரண்டாவது முறையாக அலுவலகங்கள் கதவடைப்பு நடவடிக்கைக்கு உள்ளாயின.

அமெரிக்கா பாராளுமன்ற செனட் சபையில் நேரம் கடந்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர், 600 பக்கங்கள் கொண்ட மசோதா பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டது. அங்கு 240 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 186 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், கதவடைப்பு நடவடிக்கை சிலமணி நேரங்களில் முடிந்தது.

முன்னதாக, கடந்த மாதம் 19-ம் தேதி இதே போல மசோதா தோல்வியடைந்ததால், சில நாட்கள் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. பின்னர், குடியரசுக்கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட பின்னர், மசோதா சில வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டு அதுவரை அவசர செலவுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மெக்சிகோ சுவர், குடியேறிகள் விவகாரம் ஆகிய பிரச்சனைகளில் டிரம்ப் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக கட்சி மற்றும் ஆளும் குடியரசு கட்சிகளில் சில எம்.பி.க்கள் மசோதாவுக்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்

(Visited 29 times, 1 visits today)