பேஸ்புக் நிறுவனம் 2 மணி நேரங்களில் 150 பில்லியன் டாலரை இழந்து பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமையன்று மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. 2 மணி நேரத்தில் அந்நிறுவனத்துக்கு 150 பில்லியன் டாலர் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்புஇ இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பைவிட அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

இதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் 15.8 பில்லியன் குறைந்துள்ளது. இதனால் அவரது சொந்து மதிப்பு 70 பில்லியன் டாலருக்குக் கீழே சென்றுவிட்டது.

அண்மையில் பேஸ்புக் தனது புதிய பயனாளர்கள் எண்ணிக்கையின் உயர்வு மிகவும் மந்தமடைந்துவிட்டதாக அறிவித்தது. இதன் எதிரொலியாகவே அந்நிறுவனத்துக்கு இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

(Visited 88 times, 1 visits today)