விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

ஜீவாவுடன் கோ படத்திலும்  சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படங்களிலும் நடித்தார். மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் இயங்கி வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை உடையில் தியானம் செய்வது போன்று இருக்கும் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இப்போது ஜிம்மில் அணியும் டூ பீஸ் ஆடையில் தன்னுடைய கட்டுக்கோப்பான உடலை காண்பித்துள்ளார். படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது இதுபோன்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

(Visited 68 times, 1 visits today)