ஐக்கிய தேசிய கட்சியினர் முன்வைத்துள்ள, சிங்கபூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கு மாபெரும் ஆபத்தாக அமையும்.

அதனை தோற்கடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தங்களோடு கரங்கோர்க்க வேண்டுமென அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி கோரிக்கை விடுத்துள்ளது.

புஞ்சிபொரளையில் அமைந்துள்ள சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர், டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(Visited 25 times, 1 visits today)