உள்நாட்டில் பேணியில் அடைக்கப்பட்ட டின் மீன்களில் ஒட்டுண்ணிகள் இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மீன் உற்பத்திச் சங்கம் (CFMASL) அறிவித்துள்ளது.

CFMASL)இன் தலைவரான சிரான் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கையில் ;

இலங்கை மீன் உற்பத்திச் சங்கமானது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற டின் மீன்களில் ஒட்டுண்ணிகள் முற்றாக இல்லை என உறுதிசெய்கின்றது. உள்நாட்டுக் கடலில் பிடிக்கப்படும் மீன்களையே ( லின்ன மீன் ) நாம் எமது உற்பத்திக்காகப் பயன்படுத்துகின்றோம்.

மீன்களில் உள்ள ஒட்டுண்ணிகளை சரியான படிமுறைகளினூடாக அகற்றுவதுடன் இதற்கான சிறந்த இயந்திரங்களானது ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சாதாரண இயந்திரத்தினை விட இது 5 மடங்கு விலை உயர்ந்ததாக உள்ளது. உற்பத்திகளின் உத்தரவாதம் மற்றும் தரம் என்பன மிக முக்கியமானது என அவர் தெரிவித்தார்.

நிறுவனமானது மீன்களை 121′ C வெப்பநிலையில் 55 நிமிடங்களில் உயர் அழுத்தத்தின் கீழ் சமைக்கின்றது. எங்கள் நிறுவனமானது FAO தரங்கள் அனைத்தையும் பெற்றுள்ளதுடன் இத்துறையில் நாங்கள் 35 வருடகாலமாக உள்ளோம்.

CFMASL நிறுவனமானது கடந்த வருடம் 7 இலட்சம் கிலோகிராம் மீன்களை உள்நாட்டில் கொள்வனவு செய்துள்ளது. இவ்வருடம் இத்தொகையினை விரிவுபடுத்தவுள்ளோம். 2020 இல் நாட்டிற்குத் தேவையான மீன்களை உற்பத்தி செய்வதே எமது நோக்கமாகும். இதன் மூலம் வருடாந்தம் மீன் இறக்குமதிக்கும செலவிடும் 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை சேமிக்க முடியும்.

TESS பிரைவட் லிமிட்டேட்டின் ஆலோசகர் மற்றும் உணவு விஞ்ஞானியான பேராசிரியர் அர்துர் பமுனு ஆராச்சி இது தொடர்பாகத் தெரிவிக்கையில்;

மீன் உற்பத்தி மற்றும் பேணியில் அடைக்கப்படும் படிமுறைகளின் போது FAO வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களானது தரமானவை என உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றார்.

Caption

CFMASL தலைவர் ஷிரன் பெர்னாண்டொவுடன் TESS பிரைவட் லிமிட்டெட்டின் ஆலோசகர் மற்றும் உணவு விஞ்ஞானியான பேராசிரியர் அர்துர் பமுனு ஆராச்சியைக் காணலாம்.

(Visited 48 times, 1 visits today)