47 வயதாகும் நடிகை மனிஷா கொய்ராலா, ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் நடிகை மனிஷா கொய்ரலா, பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் ‘பம்பாய்’ படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து அர்ஜுனுக்கு ஜோடியாக ‘முதல்வன்’ படத்திலும், ‘பாபா’ படத்தில் நடிகர் ரஜினினுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

இவர் நடித்த எல்லா படங்களிலும் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. ஆனால் தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’. இந்தப் படத்தில் நடிகை மனிஷா கொய்ரலா நீச்சல் உடையில் நடித்துள்ளார். இவருக்கு 47 வயதாகிறது.

தன்னோட இந்த கவர்ச்சி நிலைமைக்கு காரணம் குறித்து நடிகை மனிஷா விளக்கமளித்துள்ளார். ‘‘இந்தப் படத்தை இயக்குனர் திபாகர்பனிஜி இயக்கி வருகிறார். அவர் கொடுத்த ஐடியாபடிதான் இப்படி ஒரு காட்சியில் நடித்தேன. நான் இளம் வயத்தில் கூட அப்படி நடித்ததில்லை. படத்தில் வரும் அந்த ஒரு காரணத்துக்காக தான் இப்படி நடித்தேன்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ஒரு பெண் தன்னை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ளத்தான் விரும்புவாள். நானும் அதைதான் விரும்புகிறேன். மேலும் என்னுடைய கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் அதன்படி நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’’ என்றார் மனிஷா.

(Visited 72 times, 1 visits today)