தாய்லாந்தில் உள்ள குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட பிறகு, அவர்களின் முதல் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், மருத்துவமனை வார்டு கண்ணாடி வழியாக சிறுவர்களைப் பார்த்து பெற்றோர் கண்ணீர் மல்க ஆறுதல் கூறுவதும், சிறுவர்கள் அவர்களைப் பார்த்து உற்சாகமாக கையை அசைப்பதும் பதிவாகி உள்ளது.

சிகிச்சை பெறும் அவர்கள் அனைவரும் சராசரியாக 2 கிலோ எடை வரை குறைந்துள்ளதாகவும், 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முழுமையாக அவர்கள் பழைய நிலைமைக்கு திரும்ப ஒரு மாதமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 23 times, 1 visits today)