வெலிக்கடை சிறைச்சாலையில் போதைப் பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடைய மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட  7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் போவதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து குறித்த கைதிகள் அச்சத்தில் காணப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையில் செப்பல் வாட்டு அறையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட 271 குற்றவாளிகள் காணப்படுவதாகவும் இவர்களில் 47 பேர் மேன்முறையீடு செய்துள்ளவர்கள் எனவும் சிறைச்சாலை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 கைதிகள் காணப்படுவதாகவும் குறித்த பேச்சாளர் சகோதர மொழி ஊடகமொன்றிடம் மேலும் கூறியுள்ளார்.

(Visited 15 times, 1 visits today)