ஹரி இயக்கத்தில் ‘சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பாக ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்டு வருகிறார்கள். இதில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்கும் டூயட் பாடலாக உருவாக்கி வருகிறார்கள்.

இந்தப் பாடல் படத்தின் முதல் பாடல் என்றும்  விக்ரமுக்கு அறிமுகப் பாடல் இல்லை என்றும் இயக்குனர் ஹரி கூறியுள்ளார். மேலும்  முதல் முறையாக டூயட் பாடலை படத்தில் முதல் பாடலாக உருவாக்கி இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். சாமி படத்தின் முதல் பாகம் எடுத்த பிறகு  இதன் தொடர்ச்சி உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்  முடியவில்லை. அதற்கான கதையை சிங்கம் பாகத்தின் தொடர்ச்சிக்கு உபயோகப்படுத்தி விட்டேன். சிங்கம் படத்திற்காக யோசித்ததை சாமி ஸ்கொயர் படத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன் என்றும் ஹரி கூறியிருக்கிறார்.

சாமி முதல் பாகத்தில் அறிமுகப்பாடலான ‘திருநெல்வேலி அல்வாடா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதுபோல்  இந்தப் படத்திலும் விக்ரமுக்கு அறிமுகப்பாடல் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால்  அந்த அறிமுகப்பாடல் இல்லை என்று ஹரி கூறியிருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அடைந்திருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்கள். வில்லனாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

(Visited 32 times, 1 visits today)