சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தமிழ்படத்தின் இரண்டாவது பாகமாக ‘தமிழ்ப்படம் 2’ உருவாகி இருக்கிறது. சிவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் முதல் தற்போது வரை பல்வேறு திரைப்படங்களையும், அரசியல் சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளையும் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டு வரும் படக்குழு சமீபத்தில் பாகுபலி, நடிகையர் திலகம், டார்க் நைட், சின்னக்கவுண்டர் உள்ளிட்ட படங்களை சமீபத்தில் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டிருந்தது. தற்போது படம் ரிலீஸ் தேதிக்கு விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் போஸ்டரை கலாய்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.

விஜய் காரில் லேப்டாப் பார்ப்பது போல் இருக்கும் சர்கார் போஸ்டரை, சிவா சைக்கிள் ரிக்‌ஷாவில் லேப்டாப் பார்ப்பது போல் அமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் அதில் ஜூலை 12ம் தேதி படம் ரிலீஸ் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

(Visited 34 times, 1 visits today)