எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று  அமைச்சரவையில் கலந்துரையாடப்பட உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

நிதியமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட விலைச் சூத்திரத்திற்கு அமைவாக கடந்த 05ம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

எனினும் பின்னர் அந்த விலை அதிகரிப்பு அரசாங்கத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலைச் சூத்திரத்திற்கு அமைவாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சர்வதேச சந்தைப் படி விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சு கூறியிருந்தது.

குறித்த விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்ததுடன், அதனை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவையில் கலந்துரையாடப்பட உள்ளது.

(Visited 8 times, 1 visits today)