நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக, காலியில் அமைந்துள்ள சீனிகம விகாரையில் தேங்காய்கள் உடைத்து நாளை மறுதினம் வழிபாடு செய்யப்போவதாக ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது.

இதேவேளை, விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்களுக்கு வீரர் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கு தெரியாதென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பெதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

(Visited 32 times, 1 visits today)