அந்நியன் உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்து சில வருடங்களுக்கு முன் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை சதா.

அதன்பிறகு மார்க்கெட் இருந்தவர் தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டார்ச்லைட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலியல் தொழிலாளியாக சதா நடித்த டார்ச்லைட் படத்தை ஏ.மஜித் இயக்கியுள்ளார்.

ஜிவி தயாரிப்பில் விஜய்யை வைத்து தமிழன் படத்தை இயக்கியவர் தான் இவர். இசையமைப்பாளர் டி.இமானை அறிமுகப்படுத்திய வரும் இவர் தான்.

மஜித் இயக்கும் டார்ச் படத்தை சில வாரங்களுக்கு முன் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தில் ஆபாசம் அதிகம் இருந்ததால் சென்னையில் தணிக்கை செய்ய மறுத்துவிட்டார் மண்டல தணிக்கை அதிகாரி.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு சான்றிதழ் கொடுத்தது சர்ச்சையானதால் உஷாரான பெண் அதிகாரி டார்ச்லைட் படத்தை பார்த்ததும் சான்றிதழ் தர மறுத்துவிட்டார். அதன்பிறகு டிரிப்யூனலில் முறையிட்டு டில்லிக்கு சென்று சென்சார் செய்து சான்றிதழ் பெற்று திரும்பியுள்ளனர்.

(Visited 71 times, 1 visits today)