ஆப்பிள்,சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், எல்ஜி தொடர்ந்து வித்தியாசமான முடிவுகளின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் எல்ஜியின் வி40 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஆன்ட்ராய்டு போலீஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எல்ஜி வி40 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை விட இருமடங்கு அதிகம் என்ற வகையில் எல்ஜி தனது ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்களையும், முன்புறம் இரண்டு கேமராக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவாய் P20 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க டூயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. எல்ஜி வி40 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் டூயல் முன்பக்க கேமரா கொண்டு ஃபேஸ் அன்லாக், 3னு ஃபேஸ் மேப்பிங் சிறப்பானதாக இருக்கும்.

பின்புறம் மூன்று கேமராக்களில் ஒரு வழக்கமான லென்ஸ், வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் மூன்றாவது கேமரா கொண்டு போர்டிரெயிட், ட்ரூ மோனோக்ரோம் அல்லது லாஸ்லெஸ் சூம் படங்களை எடுக்க முடியும். இந்த அம்சம் சற்றே வித்தியாசமானதாக தெரிந்தாலும்இ இவை எவ்வாறு இயங்கும் என்பதும்இ எவ்வாறு பொருத்தப்படும் என்பதும் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

எல்ஜி வி40 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற வகையில்இ வழக்கமான வி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவாட்-DAC செட்டப்,, பல்வேறு உயர் ரக ஆடியோ ஃபார்மேட்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படும். சமீப காலங்களில் எல்ஜி-யின் ஜி சீரிஸ் மற்றும் வி சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் அம்சங்கள் மிகவும் நுனுக்கமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

(Visited 40 times, 1 visits today)