துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது.

ராணுவ புரட்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார், அரசு ஊழியர்கள், புரட்சிக்கு உதவிய பொதுமக்கள் என 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 1 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களை துருக்கி அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மத குரு பெதுல்லா குலன்-தான் சதி செய்துள்ளார் என துருக்கி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் அவரை நிபந்தனையின்றி துருக்கி அரசிடம் ஒப்படைக்குமாறும் துருக்கி அரசு கூறி வருகிறது.

இந்நிலையில்இ ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 192 ராணுவ அதிகாரிகளை கைது செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள், மத குரு பெதுல்லா குலனுடன் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக தொலைபேசியில் உரையாடிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் ராணுவ பிரிகேடியர் ஜெனரல் ஒருவர், 30 போர் விமான பைலட்டுகள் உள்பட விமானப்படையை சேர்ந்த 99 அதிகாரிகள் மற்றும் தரைப்படையை சேர்ந்த 99 ராணுவ அதிகாரிகள் என மொத்தம் 192 ராணுவ அதிகாரிகள் கைது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

துருக்கியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எர்டோகன், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி, முன்பு இருந்ததை விட இம்முறை அதிகப்படியான அதிகாரங்களை உடைய அதிபராக அவர் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 31 times, 1 visits today)