கடந்த ஆண்டு மே மாதம் GSP + வரிச் சலுகை மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கடல் உணவு ஏற்றுமதியானது 125% ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்குள்ள திறந்த சந்தை முறையானது, இதன் வெற்றிக்கு ஏதுவாகியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மீன்பிடி மற்றும் நீர்வாழ் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ‘நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு 14’ (Sustainable Development Goal 14) எனும் நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நிலைபேண்தகு அபிவிருத்தி வள முகாமைத்துவமானது வெற்றிகரமான ஏற்றுமதிக்கு இன்றியமையாததாகும். 2 பில்லியன் ரூபாவை நாம் மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்காக செலவிட்டுள்ளோம். சிலாபம், மிரிச போன்ற துறைமுகங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

மேலும் மீனவர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 38 கிராமங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்கமைய வாழ்வாதாரம், வீட்டு வசதி, சமூக அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவை மேம்படுத்தப்படவுள்ளன. சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை அபிவிருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மீன்பிடித் துறையானது 2% பங்களிப்பு செய்வதுடன், இது 1,300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக் கொடுக்கின்றது. 222,000 பேருக்கு நேரடி தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளதுடன், 191,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கின்றது.

(Visited 94 times, 1 visits today)