கடத்தப்பட்டு காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இது குறித்து கருத்துத் தெரிவித்த சந்தியா என்னெலிகொட;

“.பிரகீத் என்னெலிகொட ஐக்கிய தேசிய கட்சியின் வாயிலாக சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். இதனாலேயே அவர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

ஆனால் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு பிரகீத் எக்னெலிகொட யார் என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் தொலைபேசி வாயிலாக எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

இதனால் தாம் உள்ளிட்ட தனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பினை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கிறேன்..” என சந்தியா என்னெலிகொட கேட்டுக் கொண்டுள்ளார்.

(Visited 22 times, 1 visits today)