AIA இன்ஷுரன்ஸின் அடுத்த தலைமுறைக்கான பரிபூரணமான AIA ஹெல்த் புரடெக்டர் ((AIA Health Protector ) ) தற்போது இரண்டு புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இலங்கையில் மருத்துவப் பணவீக்கம் 7% இற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதனால் அனைத்துச் சுகாதாரப் பராமரிப்புச் செலவீனங்களினதும் மிகவும் பெரியளவிலான பகுதியானது செலவு கூடியதொன்றாகவே இருந்து கொண்டிருப்பதுடன், அது காப்புறுதி நிறுவனத்தினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ நிதியுதவி அளிக்கப்படாமலேயே காணப்படுகின்றது.

எனினும் இக்காரணத்தினால் சிறந்த சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருதாமல் அதை ஒதுக்கிவிட முடியாது.

இதனாலேயே AIA ஹெல்த் புரடெக்டர் இரண்டு புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது இலங்கையில் காணப்படுகின்ற மிகவும் பரிபூரணமான சுகாதாரக் காப்புறுதித் திட்டமொன்றாகவே இதனது முதன்மையான நிலையை மேலும் வலுவூட்டுகின்றது.

நீங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது பணத்தைப் பற்றிய எந்தவொரு கவலையுமின்றி உலகத்தின் எந்தவொரு இடத்திலும் (ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா தவிர்ந்த) சிகிச்சையைப் பெறுவதற்கு AIA இனுடைய உலகளாவிய பணமற்ற வைத்தியசாலை அனுமதி உங்களை அனுமதிக்கின்றது.

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் AIA இனுடைய பணமற்ற வைத்தியசாலை அனுமதி அட்டையை அவ்வைத்தியசாலையில் சமர்ப்பிக்க வேண்டியது மட்டுமேயாகும். இதன் பின்னர் மற்றைய விடயங்களை அஐஅ பார்த்துக்கொள்ளும்.

இச்சிறப்பம்சமானது மிகப்பெரிய சௌகரியத்தையே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. ஏனெனில் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டிலோ அல்லது இலங்கையிலோ சிகிச்சை ஒன்றை நாடும் போது வெளிநாட்டு நாணயத்தையோ அல்லது வேறு பணத்தையோ எடுத்துச் சென்று பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காகச் சிரமப்பட வேண்டியதொரு தேவையிருக்காது.

இரண்டாவது வைத்திய ஆலோசனையைப் பெறக்கூடியதாக இருப்பதே இங்கு மற்றுமொரு சிறப்பம்சமாகும். இப்பதம் பரிந்துரைப்பது போல இப்புதிய சிறப்பம்சமானது விசேட வைத்திய நிபுணர் ஒருவரிடமிருந்து இலவசமாக இரண்டாம் வைத்திய ஆலோசனையைப் பெறுவதற்கு உங்களை அனுமதிக்கின்றது.

AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி பங்கச் பெனர்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர் ஒருவரின் கண்ணோட்டத்தில், சமீபத்தில் யாராவது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு திறந்த இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டால், அறுவைசிகிச்சைக்கு முன்னதாக இதற்கு வேறு ஏதாவது மாற்று வழிகள் உள்ளனவா என விளங்கிக் கொள்வதற்கு மிகச்சிறந்த மற்றுமொரு விசேட அறுவைசிகிச்சை நிபுணரிடமிருந்து இரண்டாம் ஆலோசனை ஒன்றைப் பெறுவதற்கே அவர் நிச்சயம் விரும்புவார்.

AIA இன் இரண்டாம் வைத்திய ஆலோசனை சிறப்பம்சமானது உடலுறுப்பு மாற்றம், இதயம் தொடர்பான நோய்கள், புற்றுநோய்கள் போன்ற மிகவும் தீவிரமான நோய் நிலைமைகளுக்கு சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்கு முன்னராக நன்கு தகவலறிந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சௌகரியத்தையே எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது’ எனத் தெரிவித்தார்.

நாங்கள் இங்கு AIA ஹெல்த் புரடெக்டரின் ஏனைய சிறப்பம்சங்களையும் மறந்துவிடக் கூடாது. அவை இதை மிகவும் பரிபூரணமான திட்டம் ஒன்றாகவே மாற்றுகின்றது. அதாவது இது முற்றுமுழுதாக ரூபா.20 மில்லியன் வரை தாராளமான வைத்தியசாலை செலவுக் காப்பீட்டை உள்ளடக்குவதுடன், புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளடங்கலாக 37 பாரதூரமான நோய்களையும் காப்பிடுகின்றது. அத்துடன் இது 250 இற்கும் அதிகமான சத்திர சிகிச்சைகளையும் மற்றும் வைத்தியசாலை அனுமதிக்கு முந்திய மற்றும் பிந்திய செலவுகளையும் காப்பிடுகின்றது.

(Visited 36 times, 1 visits today)