எஸ். ஹரியதர்ஷினி

லங்கையின் நிதியியல் சேவையை மேம்படுத்துவது அபிவிருத்தியடைந்து வரும் வங்கியியல் துறைக்கு ஆதரவளிக்கும் என்பதுடன் நிதியியல் பிரிவானது தரமான சேவையை வழங்குவதனையே மிக முக்கிய விடயமாக கவனத்தில் கொள்வதாக People’s Leasing & Finance( PLC) பிரதம நிறைவேற்றதிகாரியும் பொது முகாமையாளருமான ஏ.எஸ். இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

People’s Leasing & Finance (PLC) தலைமை அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியளாளருடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நவீன நிதியியல் உலகில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பமானது வேகத்தை இயக்கவும் , நிதி ஒப்பந்தங்களில் வசதி, துல்லியம் , வாடிக்கையாளர்களுக்கான திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்கு உதவுகின்றது எனத் தெரிவித்தார்.

22 வருடங்களுக்கு முன்னர் 3 ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட People’s Leasing & Finance (PLC) நிறுவனமானது இன்று People’s insurance , People’s micro finance , People’s leasing ,People’s Leasing fleet management, People’s Leasing property development ,People’s Leasing have look properties என்று 5 குழும நிறுவனங்களுடன் 3000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ளது.

வங்கியியல் அல்லாத பிரிவு , வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புகளை ஏற்கும் திறன் என்பவற்றில் People’s Leasing & Finance (PLC) நிறுவனமானது முன்னணியில் உள்ளது.

நாங்கள் எமது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதிகளவு உற்பத்திகளை சந்தையில் சேர்த்துள்ளோம். இவை வாடிக்கையாளர்களை அதிகளவு கவர்ந்துள்ளது. எதிர்காலத்தில் நிறுவனமானது தமது செயற்பாடுகளை விஸ்தரிக்கவுள்ளதுடன் ஒரு சில கிளைகளை நாட்டிற்கு வெளியேயும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இப்ராஹிம் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் பங்களாதேஷ் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்தோம். இது இலங்கையின் சந்தை வளர்ச்சி , இலாப கரமான வர்த்தக வாய்ப்புகள் போன்றவற்றுக்கு வழிவகுப்பதுடன் பங்களாதேஷ் சந்தையில் நாம் சிறந்த செல்வாக்கினை செலுத்த முடியும் என்பதில் உறுதியாகவே உள்ளோம்.

குழந்தைகளின் கல்வி, சுற்றாடல் சார்ந்த சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு People’s Leasing & Finance (PLC) நிறுவனமானது பாரிய அளவில் பங்களிப்பு செய்கின்றது. அந்த வகையில் முன்பள்ளி பாடசாலைகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளது.

மேலும் People’s Leasing & Finance (PLC) நிறுவனமானது மக்கள் வங்கியை தாய் நிறுவனமாகக் கொண்டுள்ளதுடன் 75 % அரசாங்கத்திற்கு சொந்தமானதாகவும் உள்ளது.

(Visited 27 times, 1 visits today)