மிகவும் குறைந்தளவான இளம் இலங்கையர்கள் தமது வருமானமீட்டும் தொழிலாக பாற்பண்ணைச் செய்கையை மேற்கொள்கின்றனர். அவர்களின் கருத்துப்படி இந்தத் துறை ஊழியர்களைப் பொறுத்தது, இலாபமீட்டாதது மற்றும் வரவேற்பற்றது என நினைக்கின்றனர்.

அண்மையில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அகில இலங்கை பாற்பண்ணை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கின் போது பாற்பண்ணை தொடர்பான இந்தக் கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பண்ணையின் உற்பத்தித் திறன் மற்றும் பாலின் தரம் போன்ற சவால்கள் சிறு பாற்பண்ணையாளர்களிலிருந்து சுபீட்சமான தொழில் முயற்சியாளர்களாகத் தரமுயர்வதற்கான பிரதான முட்டுக்கட்டைகளாக அமைந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் 300,000க்கும் அதிகமான சிறு பாற்பண்ணையாளர்களால், உள்நாட்டு பால் விநியோகத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பு வழங்கப்படுகிறது. மொத்த தேசிய உற்பத்தியில் துறையின் பங்களிப்பு 1.2 சதவீதமாக அமைந்துள்ளது. இதனூடாக பாற்பண்ணை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு பாரியளவு வாய்ப்பு காணப்படுகின்றமை இதனூடாக புலப்படுகிறது.

பாற்பண்ணைத்துறையை மேம்படுத்துவதற்கு அவசியமான பயிற்சிகள், உதவிகள் மற்றும் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் துறையினரிடமிருந்து தெளிவான வழிகாட்டல் அவசியமாக அமைந்துள்ளது. ஆனாலும், சிறு பண்ணையாளர்களின் மனநிலையில் தொழில் முயற்சியாண்மைசார் மாற்றமும் தேவைப்படுகிறது. இதனூடாக அவர்களின் முழுமையான திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு பல சவால்களுக்கு முகங்கொடுத்து, சளைக்காமல் மீண்டெழுந்த பாற்பண்ணை தொழில் முயற்சியாளர்களில் ஒருவராக குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கெலும் பிரசன்னவை குறிப்பிட முடியும். தமது குடும்பத்துக்கு நிலையான வருமானத்தைத் தேடிக் கொள்வதை கவனத்தில் கொண்ட கெலும், தமது இளம் வயதில் பாற்பண்ணைச் செய்கையில் ஈடுபட ஆரம்பித்தார்.

பாற்பண்ணைத்துறையில் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டிருந்த போதிலும், அவர் மத்தியில் போதிய அறிவு மற்றும் அனுபவம் காணப்படவில்லை. இதன் காரணமாக, துறையிலிருந்து விலகிச் செல்ல அவர் தீர்மானித்தார்.
2013 இல், தமது குடும்பத்தாரின் முறுக்கு வியாபாரம், கோழிக்குஞ்சு வளர்ப்பு மற்றும் வெளிநாட்டு தொழில் போன்றவற்றில் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமது 30 வயதில் கெலும் பாற்பண்ணைத் தொழிலை மீண்டும் ஆரம்பித்தார்.

2015 இல், ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்காவுக்கு பசுப்பால் விநியோகத்தை ஆரம்பித்தார். குளியாப்பிட்டிய பிரதேசத்தில் தனது புதிய பால் குளிர வைக்கும் நிலையத்தை நிறுவியிருந்ததை தொடர்ந்து தமது பால் விநியோகத்தை இந்நிறுவனத்துக்கு மேற்கொண்டிருந்தார்.

கெலும் கருத்துத் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் எனது சிறியளவிலான பாற்பண்ணையை நான் மீள ஆரம்பித்திருந்ததுடன், மந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருந்தேன். ஆனாலும், செயற்பாடுகளைக் கொண்டு நடத்துவதற்கு எனக்கு போதியளவு அறிவு மற்றும் ஆற்றல் காணப்படாததை விரைவில் உணர்ந்து கொண்டேன் என்றார்.

ஃபொன்டெராவின் விநியோக உறவுகள் அதிகாரி ((SRO) ) அணியை நான் அதிர்ஷ்டவசமாக சந்தித்தேன். பாற்பண்ணை முகாமைத்துவம் தொடர்பான உதவிகளை இவர்கள் எனக்கு வழங்கியிருந்ததுடன், தொடர்ச்சியான வருமானத்தை பெற்றுக்கொள்ள உதவியிருந்தனர். இதனூடாக நான் நிதிசார் பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டதுடன், விரிவாக்கல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன் என்றார்.

அடுத்த வருடத்தில், ஃபொன்டெராவுடன் பங்காண்மை தேசிய விவசாய வியாபார அபிவிருத்தி நிகழ்ச்சி (NADeP) அதிகாரிகள் ஏற்படுத்தி, கெலும் மற்றும் ஏனைய பாற்பண்ணையாளர்களை அவர்களின் கிராமத்துக்குச் சென்று அணுகி, கிராமிய பாற்பண்ணையாளர்களுக்கு வலுவூட்டல், வாழ்வாதாரங்களை மேம்படுத்தல் மற்றும் நிலையான வருமானமீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

இந்த பங்காண்மையினூடாக கெலும் போன்ற பாற்பண்ணையாளர்களுக்கு உதவும் செயற்பாடு, பாலின் தரத்தை மேம்படுத்தல், உள்நாட்டு பாற்பண்ணையாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் அவர்களின் உதவும் செயற்பாடுகளுக்கான ஃபொன்டெராவின் ஒன்றிணைக்கப்பட்ட பாற்பண்ணை அபிவிருத்தி நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இந்த பங்காண்மையின் முக்கிய அங்கமாக, எந்திரமயமாக்கலுக்கு அவசியமான சாதனங்களை பாற்பண்ணையாளர்களுக்கு வழங்குவது அமைந்திருந்தது.

(Visited 45 times, 1 visits today)