இலங்கையில் லொத்தர் துறையில் அதிகூடிய அனுபவசாலியும் வணிகத்துறை நிபுணருமான அநுர ஜெயரத்ன அண்மையில் அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளராக பணிப்பாளர் சபையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிசிறந்த லொத்தர் சந்தைப்படுத்தல் நிபுணரான அவர் தெற்காசியாவில் உள்ளுர் லொத்தர் துறையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் அவரது திறமை வெளிப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, தென் ஆபிரிக்கா, கிறீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உலக லொத்தர் மாநாடுகளிலும் இலங்கையின் பிரதிநிதியாக அவர் கலந்து கொண்டார்.

மகாபொலவின் பெருமைக்குரிய புதல்வனான அநுர அவர்கள் வியாபார நிர்வாகத் துறையிலான தனது பட்டப்படிப்பை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் வியாபார நிர்வாகத்திற்கான பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவை ஐக்கிய இராச்சியத்திலுள்ள லீஸ்டர்சியா பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டிருந்தார்

இச்சபையில் 1994 ஆம் ஆண்டு பயிற்சி உத்தியோகத்தராக சேர்ந்த அவரின் பாதையில் சந்தைப்படுத்தல் அதிகாரி/ உதவி பொது முகாமையாளர் ( சந்தைப்படுத்தல்) பதில் பொது முகாமையாளர் / பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) ,பிரதி பொது முகாமையாளர் ஆகிய படிக்கற்களை கடந்து மிகச்சிறப்பாக செயலாற்றும் புதிய பொது முகாமையாளராக உயர்ந்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)