ஹோட்டல் ஷோ கொழும்பு 2018 (Hotel show colombo 2018) எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொழும்பு BMICH இல் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வானது இலங்கை ஹோட்டல் பாடசாலை பட்டமளிப்பு சங்கத்தினால்(CHSGA) ஏற்பாடு செய்யப்படவுள்ளதுடன், அரச மற்றும் தனியார் துறையின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

20 ஆவது தடவையாக நடைபெறவுள்ள ஹோட்டல் கண்காட்சியில் உற்பத்திகள் மற்றும் சேவைத் துறையை பிரதிபலிக்கும் வகையில் 1,000 க்கும் மேற்பட்ட வர்த்தக நாமங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மாலைதீவு , செஷல்ஸ் , இந்தியா , தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

ஹோட்டல் துறையில் திறமை வாய்ந்த ஊழியர்களை இனங்காண்பதற்கு இந்நிகழ்வானது உறுதுணையாக அமையவுள்ளது.

“எதிர்கால விருந்தோம்பல் இன்று” (Future of hospitality today) என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இக் கண்காட்சியானது, ஆளுமை மற்றும் திறமை வாய்ந்த சமையற்கலை நிபுணர்களை மீண்டும் காட்சிப்படுத்தவுள்ளது. அதாவது சமையற்கலை நிபுணர்களின் திறன்கள், ஆளுமைகளை பகுப்பாய்வு செய்யும் வகையில் உணவு தயாரிப்பு ,பரிமாறல், அறை வடிவமைப்பு என பல போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

இது தொடர்பாக CHSGA இன் தலைவர் சமந்த குணரத்ன தெரிவிக்கையில் ;

“கடந்த பல வருடங்களாக இந்த Hotel show colombo 2018   ஆனது விருந்தோம்பல் துறை முதல் நிலைப்படுத்தி முன்னெடுக்கப்படுவதுடன், இது இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்” என்றார்.

(Visited 11 times, 1 visits today)