புரட்சிகரமான தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதனூடாக காப்புறுதித்துறையில் தனக்கென தனிநாமத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், வாடிக்கையாளர்களுக்கு வாழ்க்கையை மாற்றிக்கொள்ளக்கூடிய மற்றுமொரு புத்தாக்கமான டிஜிட்டல் அம்சமொன்றை வழங்க முன்வந்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் அண்மையில் தனது முதலாவது டிஜிட்டல் காப்புறுதிப்பத்திரத்தை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவை மற்றும் வெளிப்படையான தகவல்களை பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய டிஜிட்டல் காப்புறுதிப் புத்தகத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய சகல தகவல்களையும் தமது விரல்நுனிகளிலேயே பெற்றுக் கொள்ள முடியும். ஆயுள் காப்புறுதி தொடர்பில் தமது தகவல்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்வதில் ஏற்படக்கூடிய காலதாமதங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த புதிய முறையின் பிரகாரம், வாடிக்கையாளர்களின் கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று அனுப்பப்படும், அதில் காணப்படும் QR இனூடாக தமது காப்புறுதிப்பத்திரத்தில் அடங்கியுள்ள விபரங்களை அவர்களுக்கு பார்வையிட முடியும். இந்த டிஜிட்டல் காப்புறுதிப் புத்தகங்கள் QR குறியீடு செயற்படுத்தப்பட்டவை, “insurance simplified” உள்ளம்சத்துடன், காப்புறுதிப் பத்திரத்தில் அடங்கியுள்ள விடயங்களை எளிமையான முறையில் வழங்குவதற்கு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னணி பதிவு முகாமைத்துவம் மற்றும் ஆவணங்கள் பதிவு செய்யும் நிறுவனங்களில் ஒன்றான DOK Solution Lanka பிரைவட் லிமிட்டெட் உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்து, இந்த புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஆயுள் பொது முகாமையாளர் இரோஷினி தித்தகல கருத்துத் தெரிவிக்கையில், மற்றுமொரு பிரத்தியேகமான சேவையை அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்க்கும் வகையிலும், சௌகரியத்தை சேர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்தப் பிரத்தியேகமான சேவை அறிமுகத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது ஆயுள் காப்புறுதிப் பத்திரத்துடன் தொடர்புடைய சகல தகவல்களையும் தமது விரல் நுனிகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த செயற்திட்டத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதிப் பத்திரத்துடன் தொடர்புடைய தகவல்களை பெற்றுக் கொடுப்பதில் ஏற்படக்கூடிய தாமதங்களை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆயுள் காப்புறுதி வழங்கக்கூடிய அனுகூலங்களை பற்றி அவர்களுக்கு இலகுவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும், DOK Solution Lanka உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது என்றார்.

DOK Solution Lanka பிரைவட் லிமிட்டெட் பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரபோதினி வணிகசுந்தர கருத்துத் தெரிவிக்கையில், யூனியன் அஷ்யூரன்ஸ் போன்ற துறையின் முன்னோடியுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கிறோம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான சேவையை பெற்றுக் கொடுப்பதில் எமது பங்களிப்பை நாம் வழங்கியுள்ளோம். காப்புறுதித்துறையில் புதிய நியமங்களை பதிவு செய்யும் நிறுவனமாக நாம் அவர்களை காண்கிறோம். யூனியன் அஷ்யூரன்ஸ் அதன் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான பங்காளராக நாம் இணைந்துள்ளோம். செயற்பாட்டு ரீதியில் வினைத்திறன் வாய்ந்த மற்றும் துல்லியமான பரிபூரண காப்புறுதி முகாமைத்துவ செயன்முறைகளை எளிமையான முறையில் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையச் செய்வது என்பது எமது இலக்காக அமைந்துள்ளது. என்றார்.

(Visited 9 times, 1 visits today)