கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் துருவ நட்சத்திரம். கௌதம் படங்கள் என்றாலே அதற்கான ஒரு வடிவமைப்பு இருப்பதோடு எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.

ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து விக்ரம் சாமி 2 ல் நடித்து வரும் நிலையில் இன்னும் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையவில்லை. இன்னும் பணிகள் இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க விக்ரமின் சம்பள விசயம் தான் எனவும் அவர் கூடுதல் சம்பளம் கேட்டார் எனவும் சில தகவல் பரவியுள்ளது. தற்போது இந்த தகவலை இயக்குனர் கௌதம் மறுத்துள்ளார்.

பட வேலைகள் கால தாமதமானாலும் விக்ரம் முழுமையான ஒத்துழைப்பும், உழைப்பும் கொடுத்துள்ளார். வரும் மே 19 ல் படம் வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.

(Visited 101 times, 1 visits today)