ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் ஜனாதிபதியாவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது பற்றி, அதுல் கெசாப்புடனான சந்திப்பின் போது, எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது. இலங்கையை விட்டு வெளியேறும் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இடம்பெற்றது” என்றும் கூறியுள்ளார்.

(Visited 117 times, 1 visits today)