காணாமல்போனோர் அலுவலகத்தின் பொது மக்களுடனான சந்திப்பு, திருகோணமலை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்றருது.

இதன் போது காணாமல் போனோர் அலுவலகத்தில் கடமைகளுக்காக விசாரணை செய்யும் அலுவலர் பெண்கள் நியமிக்கப்படவேண்டும் என்று திருகோணமலை அமரா குடும்பம் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியமும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையமும் இணைந்து இளைஞர்கள் சார்பாக கேட்டுக்கொண்டுள்ளது.

திருகோணமலை உவர் மலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற இந்த சந்திப்பில் திருகோணமலை அமரா குடும்பம் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியமும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையமும் இணைந்து இளைஞர்கள் சார்பாக மஹஜர் ஒன்றினை கையளித்தது.

இந்த மகஜரிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பகுதிகளில் காணாமல்போனோருக்கான அலுவலகங்கள் திறக்கப்படவேண்டும்,காணாமல் போனோர்களின் தகவல்களை உரிய குடும்பங்களுக்கு அரசு பெற்றுத் தரவேண்டும்,தடுப்புக் காவலில் உள்ளோர்களை விசாரனை செய்து துரிதமாக விடுதலை செய்யவேண்டும் வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியான ஆலோசணைகளையும் வழக்கு விபரங்களையும் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்,காணாமல் போனோர் அலுவலகத்தில் கடமைகளுக்காக விசாரனை செய்யும் அலுவலர் பெண்கள் நியமிக்கப்படவேண்டும் ஏனெனில் ஆண்களின் அதிகாரி நியமனம் காரணமாக பாலியல் வன்முறைகள் நடக்க நேரிடும்,நஷ்ட ஈட்டு முறைகள் தெளிவாக வழங்கப்படவேண்டும்,காணாமல் போனோர்களுக்கான குடும்பங்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும் அதனூடாக அரச உதவித்திட்டங்கள் பாடசாலை பிள்ளைகளுக்கான கொடுப்பனவுகள் போன்ற சலுகைகள் சான்றிதழ்கள் உள்ளோருக்கு வழங்கப்படவேண்டும் எனவும் அம் மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 17 times, 1 visits today)