ஏவுகணை மனிதர் என டிரம்ப் ஆல் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், நேற்று டிரம்பை சந்தித்து பேசினார்.

இரு தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் சில ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் இடையே கையெழுத்தானது. அதில் வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பது, வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.

வரலாற்றில் எழுதக்கூடிய இந்த சந்திப்புக்கு உலக நாடுகள் அனைத்தும் வரவேற்பை தெரிவித்தன. ஈரான் உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் மட்டும் வடகொரியா இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விமர்சித்தன. நேற்று, சந்திப்பு முடிந்ததும் டிரம்ப் அமெரிக்காவுக்கு திரும்பினார்.

இன்று மாலை வாஷிங்டனில் தரையிறங்கிய டிரம்ப், தனத் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

ஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் சற்று நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கினேன். ஆனால், நான் பதவியேற்ற நாளை விட தற்போது அனைவரும் பாதுகாப்பை உணர்வார்கள். இனி வடகொரியாவிடம் இருந்து எந்த அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

நான் அதிபராக பதவியேற்பதற்கு முன் வடகொரியா உடன் அமெரிக்கா போர் புரியும் என மக்கள் நினைத்தனர். வடகொரியா நமது மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஒபாமா கூறியிருந்தார். இனி எதுவும் இல்லை. இன்று நன்றாக தூங்குங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 80 times, 1 visits today)