பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற சமயம் சார்ந்த ஊடக சந்திப்பொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 29 times, 1 visits today)