பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷின் நெருங்கிய சகாக்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி, கடுகன்னாவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இவர்கள் மூவரும் இன்று  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

கண்டி பொலிஸ் நிலைய குழுவொன்றால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 13 times, 1 visits today)