அரசாங்கம் நாட்டு மக்கள் குறித்து சிறு துளியளவும் சிந்திக்காது, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய அமைச்சுப் பதவிகளை வழங்கி வருவதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான வசந்த சமரசிங்க குற்றம்சாட்டினார்.

நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அரசியல் ரீதியாக பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்குப் புதிது புதிதாக அமைச்சுப் பதவிகள் வழங்குகின்றது. மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரிப்பதே இதனால் நடைபெறுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(Visited 19 times, 1 visits today)