இந்த ஆண்டு தனது நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாட்டத்தை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளாராம்.

நடிகர் விஜய்யின் 44வது பிறந்தநாள் 22ம் தேதி வருகிறது. அவரின் பிறந்தநாளை கொண்டாட 100 நாட்களுக்கு முன்பே ரசிகர்கள் தயாராகிவிட்டனர். டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டுள்ளனர்.

ரசிகர்கள் இப்படி உற்சாகமாக இருந்த போதும். தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் முடிவு செய்துள்ளாராம்.

இதற்கு காரணம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்கள் குடும்பங்கள் கதறிக் கொண்டுள்ள போது தனது பிறந்தநாளை விஜய் கொண்டாட விரும்பவில்லை.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது.

(Visited 33 times, 1 visits today)