ஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கை கனிஷ்ட மெய்வாண்மை போட்டியாளர்கள் இன்று நாடு திரும்புகிறார்கள்.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை வீர வீராங்கனைகள் இன்றிரவு நாடு திரும்புகின்றார்கள்.

இந்த விழாவில் இலங்கையின் சார்பாக மூன்று தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலம் அடங்கலாக ஒன்பது பதக்கங்கள் வெல்லப்பட்டன.

ஆசிய கனிஷ்ட விளையாட்டுப் போட்டியொன்றில் இலங்கை பெற்ற ஆகக்கூடுதலான பதக்கத் தொகை இதுவாகும்.

(Visited 19 times, 1 visits today)