தெற்கில் பரவிய வைரஸ் காய்ச்சல் 75 சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய தகவல் தருகையில் மாகாணத்தில் பரவிய வைரஸ் காய்ச்சல் தற்போது 75 சதவீதமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் கடந்த காலத்தில் சிறப்பாக அமுலாகியது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பரவிய வைரஸ் காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் டொக்டர் விஜயசூரிய குறிப்பிட்டார்.

மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. எனவே, வைரஸ் நோய் குறித்து அனாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய கூறினார்.

(Visited 11 times, 1 visits today)