கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை புதன்கிழமை மீண்டும் திறக்கப்படும் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ஏஞ்சலா அருள்பிரகாசம் அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் மருத்துவ பீடத்தில் பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிடிவதை காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் கலவரையின்றி மூடப்பட்டது.

(Visited 23 times, 1 visits today)