உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நாளை மறுநாள்   தொடங்குகிறது. ஒரு மாதம் வரை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

பிரசெல்சில் நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் – கோஸ்டாரிகா அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பெல்ஜியம் தரப்பில் லுகாகு 2 கோலும் (42 மற்றும் 50-வது நிமிடங்கள்) மெர்டன்ஸ் (31-வது நிமிடம்), பட்சுயி (64-வது நிமிடம்) தலா 1 கோலும் அடித்தனர். கோஸ்டாரிகா தரப்பில் ரூயிஸ் (24-வது நிமிடம்) கோல் அடித்தார்.

பெல்ஜியம் கடந்த 8 போட்டியில் தோல்வியை தழுவாமல் வலிமையாக இருக்கிறது. அந்த அணி உலக கோப்பையில் ‘ஜி’ பிரிவில் உள்ளது. தோல்வியை தழுவிய கோஸ்டாரிகா ‘இ’ பிரிவில் உள்ளது.

செனகல் – தென்கொரியா மோதிய பயிற்சி ஆட்டத்தில் செனகல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டங்களில் ஜப்பான் – பராகுவே, போலந்து – லிதுனியா அணிகள் மோதுகின்றன.

(Visited 14 times, 1 visits today)