கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரெய்லரை மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கிடையே நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டாா்.

கமல்ஹாசன் படங்களில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய படம் விஸ்வரூபம். இது இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

விஸ்வரூபம் முதல் பாகத்தில் தீவிரவாதிகள் அமெரிக்காவில் குண்டு வைப்பதற்கு முன்பு குரான் ஓதிவிட்டு குண்டு வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்துஇ முஸ்லிம்கள் மோசமாக இந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக 21 முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டி இருந்தன. இதைத் தொடர்ந்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து விஸ்வரூபம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது.

விஸ்வரூபம் இரண்டாவது பாகத்தின் 30 சதவீத காட்சிகளை முதல்பாகத்தின் போதே எடுத்தார் கமல். இப்போது இரண்டாவது பாகம் தயாராகியிருக்கிறது. மேலும் இந்த படம் ஆகஸ்டு மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.   நடிகை ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .

(Visited 29 times, 1 visits today)