இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மசூதியில்  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மசூதியானது, இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாகும். இங்கு தினமும் உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புனிதி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், மெக்காவில் உள்ள இந்த மசூதியின் மூன்றாவது தளத்தில் இருந்து ஒருவர் திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து அவரது உடலை மீட்ட அதிகாரிகள், பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீ அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவல் மட்டும் வெளிவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்த விபரங்கள் தெரியவில்லை. இந்த தகவலை அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

புனித ரமலான் மாதத்தில், மெக்கா மசூதியில் தற்கொலை நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு இதே போல் சவுதியைச் சேர்ந்த, ஒருவர் மெக்கா மசூதியின் காபா முனு்பு தீக்குளிக்க முயன்றார். ஆனால், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 38 times, 1 visits today)