காலா படத்தில் ரஜினியுடன் நடித்த நாய்க்கு ரூ. 2 கோடி வரை விலை பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, காலா படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் முதல் நாளின் முதல் ஷோ முடிவதற்கு முன்பாக தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதனால் திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், காலா படத்தில் ரஜினியுடன் நடித்த நாய்க்கு ரூ. 2 கோடி வரை விலை பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!

இதுகுறித்து நாயின் உரிமையாளர் சைமன் கூறுகையில், மணியை விலைபேச ரூ. 2 கோடி வரை கேட்கின்றனர். ஆனால் நான் எனது மணியை விற்பதாக இல்லைஎன்று தகவல் தெரிவித்துள்ளாரம். மேலும், என் நாயின் மீது ரஜினி மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

(Visited 86 times, 1 visits today)