வடமராட்சி கிழக்கு,மருதங்கேணி பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்யுமாறு வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று காலை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வடமராட்சி கிழக்குமருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கியிருந்து வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றதற்கு
எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தை உள்ளுர் மீனவர்கள் இன்று காலை 8 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அலுவலகத்துக்குள் செல்ல முடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ள நிலையிலேயே உள்ளுர் மீனவர்களால் இந்த போராட்டம்முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,மாவை.சேனாதிராஜா, வடமாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன்,பா.கஜதீபன் மற்றும் சேனாதிராஜா கலைஅமுதன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

(Visited 20 times, 1 visits today)