அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில்   பிற்பகல் 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீரற்ற காலநிலையினால் புதன்கிழமை மாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினையடுத்தே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு காரணமாக அட்டன் கொழும்பு மற்றும் அட்டன் கண்டி பிரதான வீதிகளூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பாதையை சீர் செய்யும் பணியில் வீதி போக்குவரத்து அதிகார சபை ஈடுபட்டுள்ளது.

எனவே மாற்று வழிகளான கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி வரும் வாகனங்கள் கலுகல வீதியினைப் பயன்படுத்துமாறும், அட்டனிலிருந்து செல்லும் வாகனங்கள் தியகல நோட்டன் வீதியைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த மாற்று வழிகளை பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலையும், வீண் கால தாமதத்தினையும் தவிர்த்துக் கொள்ளலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

தொடர்ந்தும் மலையக பகுதியில் மழை பெய்து வருவதனால் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்த

(Visited 11 times, 1 visits today)