வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனை பயங்கரவாத தடுப்புப்பிரிவு மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு வவுனியா ஈறற்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் இலங்கை தேசியக் கொடியை ஏற்றாமை தொடர்பான விசாரணைக்கே இவர் மீள அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 20 ஆம் திகதி இந்த விசாரணை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரின் தலைமையகத்தில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கான அழைப்பாணையை பயங்கரவாத தடுப்புப்பிரிவின் யாழ் பிராந்திய அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சரை நேரில் சென்று அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளனர்.

அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள போதும் அன்றைய திகதியில் அமைச்சருக்கு வேறு வேலைகள் இருப்பதால் பிறிதொரு திகதியில் தனது முறைப்பாட்டை வழங்க முடியும் என அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கான திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

(Visited 29 times, 1 visits today)